இறைவன் உங்களைப் படைத்த அந்த அமைதி மற்றும் பேரானந்தத்தின் தெய்வீகப் பிரதிபிம்பத்தைக் கைவிடாமல் இந்த உலகில் வாழும் கலையைக் கற்றுக்கொள்வது — அது தான் நீங்கள் தீர்க்க வேண்டிய வாழ்க்கை மர்மம். அதைத்தான் யோகம் கற்பிக்கிறது.
— பரமஹம்ஸ யோகானந்தர்
அன்றாட வாழ்வில் இறைவனை உணர்ந்தறிதல் குறித்த பரமஹம்ஸ யோகானந்தரின் காலத்தால் அழியாத ஞானத்தை வழங்கும், தொகுக்கப்பட்ட சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகள் தொடரின் நான்காவது தொகுதியான ஸால்விங் த மிஸ்டரி ஆஃப் லைஃப் என்ற புத்தகத்தின் YSS பதிப்பு இந்த நவம்பரில் வெளியிடப்படும். இன்றே ஒரு பிரதிக்கு பதிவு செய்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.
இதன் முன் வெளியிடப்பட்ட நூல்களான (மனிதனின் நிரந்தரத் தேடல், தெய்வீகக் காதல், மற்றும் ஆன்ம-அனுபூதிக்கான பயணம்) ஆகியவற்றைப் போலவே, இந்த புதிய தொகுப்பும் பரமஹம்ஸ யோகானந்தர் தமது விரிவுரைகளிலும் வகுப்புகளிலும், உலகளாவிய யோகப் பாதை குறித்தும், மேலும் வெற்றிகரமாக, மிகச் சிறந்த புரிதலுடன் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்தும் இயல்பாக வழங்கிய தனிப்பட்ட அறிவுரைகளையும், ஞான கண்ணோட்டங்களையும் உங்களுக்கு அளிக்கிறது.
முப்பது வருடங்களுக்கும் மேலாக வழங்கப்பட்ட சுமார் 40 உரைகளைக் கொண்ட, ஸால்விங் த மிஸ்டரி ஆஃப் லைஃப் புத்தகம், வெளிப்படையாக பதிலற்றதாகத் தோன்றும் கேள்விகளான: நாம் ஏன் இங்கு இருக்கிறோம்? நமது விதி என்ன, அதை நாம் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? இறைவன் என்றால் என்ன, இறைவன் நல்லவன் என்றால் இந்த உலகில் தீமை ஏன் இருக்கிறது? நாம் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், நாம் எவ்வாறு அதிக மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் உணர முடியும்? போன்றவற்றிற்கு பதில்கள் வழங்குகிறது.
வாழ்க்கை மர்மத்திற்குத் தானே தீர்வு கண்டறிந்த பரமஹம்ஸ யோகானந்தர், பிரபஞ்சத்தில் செயல்படும் தெய்வீக விதிமுறைகளை எடுத்துரைக்கிறார் — அடிப்படையில், நாம் எல்லையற்ற ஆற்றல் கொண்ட, அமரத்துவ ஆன்மாக்கள் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.
பரமஹம்ஸரின் போதனைகளுக்குப் புதியவராக இருந்தாலும் சரி, அல்லது நீண்டகாலமாகப் பின்பற்றி வருபவராக இருந்தாலும் சரி, இந்தப் புத்தகம் உங்கள் ஆன்மீகப் பயணத்தை ஒளிரச் செய்யும் ஞானப் புதையலாகும்.
ஸால்விங் த மிஸ்டரி ஆஃப் லைஃப் புத்தகம் ஹார்ட்பேக், பேபர்பேக் மற்றும் மின்புத்தகப் பதிப்புகளில் கிடைக்கும்.




















