இந்நிகழ்ச்சி இத்துடன் முடிவடைந்தது.
வரவிருக்கும் நிகழ்வில் எங்களுடன் சேர விரும்பினால், நிகழ்வுகள் பக்கத்தைப் பார்வையிடவும்.

SRF மதர் சென்டரின் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வை

(ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களுடன் ஒரு சிறப்பு நேரலை)

சனிக்கிழமை, செப்டம்பர் 12, 2026

இரவு 10:30 மணி முதல்

(இந்திய நேரப்படி)

ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களுடன் சிறப்பு நேரலை ஒளிபரப்பு, செப்டம்பர் 12, 2026

நிகழ்வு பற்றி

YSS/SRF-இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களும், SRF துணைத் தலைவர் ஸ்வாமி விஷ்வானந்த கிரி அவர்களும் இணைந்து SRF சர்வதேசத் தலைமையகத்தின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புத் திட்டத்தின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பார்வையையும் ஊக்கத்தையும் விளக்குவதுடன், அந்தத் திட்டம் முழுமையடைந்தவுடன் எவ்வாறு இருக்கும் என்பதற்கான ஒரு “முன்னோட்டத்தையும்” பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள். இதில் இணைய உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

SRF சர்வதேசத் தலைமையகம் (SRF மதர் சென்டர்), பரமஹம்ஸ யோகானந்தரால் 1925 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸில் நிறுவப்பட்டது. பண்டைய கிரியா யோக அறிவியலை மனிதகுலம் முழுவதற்கும் பரப்பும் அவரது உலகளாவிய ஆன்மீகப் பணிக்கான ஆன்மீக மற்றும் நிர்வாக மையமாக இது அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 12, சனிக்கிழமை அன்று இரவு 10:30 மணி (IST) முதல் லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள SRF சர்வதேசத் தலைமையகத்திலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை அதன் பின்னரும் காணலாம்.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர