1950-ஆம் ஆண்டில் கலிபோர்னியா, பசிபிக் பாலிசேட்ஸில் உள்ள SRF லேக் ஷ்ரைனை பரமஹம்ஸ யோகானந்தர் அர்ப்பணித்ததன் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்தச் சிறப்பு நிகழ்வில், YSS/SRF-இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களுடன் இணைந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
SRF லேக் ஷ்ரைன் பரமஹம்ஸ யோகானந்தரால் ஒரு உலகளாவிய ஆன்மீக சரணாலயமாக நிறுவப்பட்டது, உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வந்து இதயம், மனம், ஆன்மா வில் உண்மையான அமைதியை உணரக்கூடிய இடமாக இது அமைந்துள்ளது. ஆகஸ்ட் 20, 1950 அன்று லேக் ஷ்ரைன் இன் அர்ப்பணிப்பின் போது அவர் கூறினார், “உண்மையான வாழ்க்கைக் கலையை நாம் கடைப்பிடிக்க வேண்டுமெனில் உலக சகோதரத்துவம் இருக்க வேண்டும். அனைத்து மதங்களுக்காகவும் இந்த ஷ்ரைன் உருவாக்கப்பட்டுள்ளது, அனைவரும் ஒரு பொது சமயத்தின் ஒற்றுமையை உணர வேண்டும்.”
2025 பசிபிக் பாலிசேட்ஸ் காட்டுத்தீயைத் தொடர்ந்து, லேக் ஷிரைன் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் காரணமாக, 2025 இல் இந்த நிகழ்வை நடத்த இயலாமல் போனது. இந்தப் புனிதத் தலத்தில் YSS/SRF தலைவருடன் நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வின் வாயிலாக இந்த முக்கியமான ஆண்டு நிறைவை இப்போது குறிக்க முடிவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த நிகழ்ச்சி லாஸ் ஏஞ்ஜலீஸ்-ல் உள்ள SRF லேக் ஷிரைன் ஆலயத்திலிருந்து ஆகஸ்ட் 22 சனிக்கிழமை, இரவு 10:30 மணி (IST) முதல் நேரலையாக ஒளிபரப்பப்படும், மேலும் பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

















