ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் சமயத்தில், கிறிஸ்து-அன்பு மற்றும் ஆனந்தத்தின் அதிர்வுகள் வழக்கத்தை விட வலுவாக விண்ணுலக மண்டலங்களிலிருந்து பூமிக்கு வெளிப்படுகின்றன. இயேசு அவதரித்த போது பூமியில் பிரகாசித்த எல்லையற்ற ஒளியால் வானவெளி நிரப்பப்பட்டது. பக்தி மற்றும் ஆழ்ந்த தியானத்தின் மூலம் ஒத்திசைந்து இருப்பவர்கள் கிறிஸ்து இயேசுவில் உள்ளார்ந்திருந்த எங்கும் நிறைந்த உணர்வுநிலையின் மாற்றும் அதிர்வுகளை வியக்கத்தக்க உணர்வுபூர்வ வழியில் உணர்கிறார்கள்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
டிசம்பர் 25, வியாழக்கிழமையன்று, கிறிஸ்துமஸ் புனித நாளில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் போற்றும் விதமாக, YSS சன்னியாசி ஒருவரால் வழிநடத்தப்படும், சிறப்பு ஆன்லைன் தியானத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு தொடக்கப் பிரார்த்தனை மற்றும் பிரபஞ்ச கீதங்கள் இடம்பெறும், அதைத் தொடர்ந்து சில எழுச்சியூட்டும் வாசிப்புகளும், ஒரு குறிப்பிட்ட நேர மௌன தியானம் நடைபெறும். அமர்வின் முடிவில், நாம் மற்றவர்களுக்காகப் பிரார்த்தனை செய்து, பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தியை செய்வோம். பின் ஒரு நிறைவுப் பிரார்த்தனை நடைபெறும்.
உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இந்த நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
கவனிக்கவும்: இந்த நிகழ்ச்சியை டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை, இரவு 10 மணி (IST) வரை பார்க்கலாம்.
கிறிஸ்துமஸை முன்னிட்டு நினவுகூரும் கிறிஸ்துமஸ் தியானங்கள் YSS ஆசிரமங்கள், கேந்திராக்கள் மற்றும் மண்டலிகளிலும் நடத்தப்படும். இந்த மையங்கள் எதிலும் நேரடியாக நிகழ்ச்சியில் தாங்கள் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தங்களுக்கு அருகிலுள்ள ஒரு YSS மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் கிறிஸ்துமஸ் செய்தி
கிறிஸ்துமஸ் ஐ முன்னிட்டு, YSS/SRF தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர் ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் ஒரு சிறப்புச் செய்தியைப் படிக்க, கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இந்த புனித தருணத்தில் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழே பகிரப்பட்டுள்ள இணைப்பு வழியாக அதைச் செய்யலாம். உங்கள் ஆதரவுக்கு ஆழ்ந்த நன்றி.

















