அந்த மாபெரும் இல்லற குருவின் இணக்கமான, சமநிலையான வாழ்க்கை ஆயிரக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் உத்வேகமாக அமைந்தது.
— பரமஹம்ஸ யோகானந்தர்
பரமஹம்ச யோகானந்தரின் பரமகுருவான லாஹிரி மகாசயர், அனைத்து YSS/SRF பக்தர்களாலும் யோகாவதார் (“யோகத்தின் அவதாரம்”) எனப் போற்றப்படுகிறார். நவீன உலகிற்கு கிரியா யோகத்தை அறிமுகப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். லாஹிரி மகாசயர் 1828 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று பிறந்தார். 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று, அவர் மகாசமாதி அடைந்து இவ்வுலகை விட்டு நீங்கினார். மகாசமாதி என்பது ஒரு பரிபூரணத்துவம் பெற்ற மகான் மேற்கொள்ளும் இறுதி தியானம் அல்லது இறைவனுடன் உணர்வுபூர்வமான ஐக்கியம் ஆகும். அந்நிலையில், அந்த மகான் பிரபஞ்ச “ஓம்” உடன் தம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டு, பௌதிக உடலைத் துறக்கிறார்.
லாஹிரி மகாசயரின் மகாசமாதி மற்றும் அவதார தின ஆண்டு நினைவு நாட்களைப் போற்றும் வகையில், 2026 செப்டம்பர் மாதத்தில் YSS சன்னியாசிகள் இரண்டு சிறப்பு ஆன்லைன் தியானங்களை வழிநடத்த உள்ளனர்:
- சனிக்கிழமை, செப்டம்பர் 26: லாஹிரி மகாசயரின் மகாசமாதி தினத்தை நினைவுகூரும் தியானம்
- புதன்கிழமை, செப்டம்பர் 30: லாஹிரி மகாசயரின் அவதார தினத்தை நினைவுகூரும் தியானம்
லாஹிரி மகாசயரின் மகாசமாதி தினத்தை
நினைவுகூரும் தியானம்
சனிக்கிழமை, செப்டம்பர் 26, 2026
காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை (இந்திய நேரப்படி)
1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று, இந்த மாபெரும் குரு மகாசமாதி என்ற நிலையை, அதாவது இறையுணர்வு பெற்ற ஒரு யோகி, தமது உடலிலிருந்து இறுதியாக உணர்வுபூர்வமாக வெளியேறும் நிலையை அடைந்தார். இந்தப் புனித நாளை நினைவுகூரும் வகையில், YSS சன்னியாசி ஒருவர் வழிநடத்தும் ஆன்லைன் தியானத்தில் எங்களுடன் இணையுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இந்நிகழ்ச்சி தொடக்கப் பிரார்த்தனையுடன் தொடங்கி, வாசிப்பு, கீதமிசைத்தல் மற்றும் தியானம் ஆகியவற்றுடன் தொடரும். இறுதியில் பரமஹம்ச யோகானந்தரின் குணமளிக்கும் பிரார்த்தனை மற்றும் நிறைவுப் பிரார்த்தனையுடன் நிறைவடையும்.
குறிப்பு: இந்நிகழ்ச்சி செப்டம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி (இந்திய நேரப்படி) வரை பார்க்கக் கிடைக்கும்.
லாஹிரி மகாசயரின் அவதார தினத்தை
நினைவுகூரும் தியானம்
புதன்கிழமை, செப்டம்பர் 30, 2026
காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை (இந்திய நேரப்படி)
இந்த மாபெரும் யோகாவதாரின் அவதார தினத்தை (பிறந்தநாள் நினைவு தினத்தை) முன்னிட்டு, செப்டம்பர் 30 அன்று YSS சந்நியாசி ஒருவர் சிறப்பு ஆன்லைன் தியானத்தை வழிநடத்துவார். நிகழ்ச்சி தொடக்கப் பிரார்த்தனையுடன் ஆரம்பமாகி, அதைத் தொடர்ந்து வாசிப்பு, கீர்த்தனை மற்றும் தியானம் நடைபெறும். இறுதியாக, பரமஹம்ச யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தியைப் பயிற்சி செய்தபின் நிறைவுப் பிரார்த்தனையுடன் நிறைவடையும்.
குறிப்பு: இந்நிகழ்ச்சி அக்டோபர் 1, வியாழக்கிழமை இரவு 10 மணி (இந்திய நேரப்படி) வரை இணையத்தில் காணக்கிடைக்கும்.
நேரடி நிகழ்ச்சிகள்
இச்சிறப்பு நாட்களில், YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளில் நேரடி நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறியவும், இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், உங்களுக்கு அருகிலுள்ள தியான மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
நன்கொடை அளித்தல்
இச்சிறப்பு நாட்களில் நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், எங்கள் இணையதளத்தின் மூலமோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தியோ; அளிக்கலாம். உங்கள் பங்களிப்பு, பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள எங்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அந்த மகத்தான குருவின் மீதான உங்கள் நிலையான அன்பையும் அசைக்க முடியாத பக்தியையும் வெளிப்படுத்தும்.

















