லாஹிரி மகாசயர் கூறியுள்ளார், பாபாஜியின் பெயரை பக்தியுடன் யார், எப்பொழுது உச்சரித்தாலும் அந்த பக்தன் அக்கணமே அவருடைய ஆன்மீக ஆசியை ஈர்க்கிறான்.
— லாஹிரி மகாசயர், ஒரு யோகியின் சுயசரிதம் நூலில்
பல நூற்றாண்டுகளாக உலகிற்கு தொலைந்து போயிருந்த கிரியா யோகம் எனும் பண்டைய விஞ்ஞானம், 19-ஆம் நூற்றாண்டில் அழிவற்ற அவதார புருஷரான மகா அவதார பாபாஜியால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. இதனைப் பரமஹம்ஸ யோகானந்தர் தனது ஒரு யோகியின் சுயசரிதம் நூலில் பகிர்ந்துள்ளார். பாபாஜி தனது சீடரான லாஹிரி மகாசயருக்கு உபதேசித்ததன் மூலம், பகவான் கிருஷ்ணரிடமிருந்து தோன்றியதும், பதஞ்சலி மற்றும் பிற ஆன்மீக ஞானிகளால் பின்பற்றப்பட்ட ஒரு ஆன்மீகப் பாரம்பரியத்துடன் மனிதகுலத்தை மீண்டும் இணைத்தார்.
1920 ஜூலை 25 அன்று, கிரியா யோக போதனைகளை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு செல்லும் நோக்கில் அமெரிக்கப் பயணத்தைத் தொடங்குவதற்குச் சற்று முன்னதாக, பரமஹம்ஸ யோகானந்தர், தாம் மேற்கொள்ளவிருந்த பணி குறித்துத் தெய்வீக உறுதிமொழியை வேண்டித் தமது கல்கத்தா இல்லத்தில் ஆழ்ந்த பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மகாவதார பாபாஜி அவருக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்: “உன்னுடைய குருவின் கட்டளைப்படி நீ அமெரிக்கா செல்வாய், பயப்படாதே; நீ பாதுகாக்கப்படுவாய். மேலை நாடுகளில் கிரியா யோக முறைகளைப் பரப்ப நான் உன்னைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.”
பாபாஜிக்கும் யோகானந்தாஜிக்கும் இடையிலான இந்த மகத்தான சந்திப்பு தினம், YSS/SRF பக்தர்களால் ஒவ்வொரு ஆண்டும் மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ் ஆக நினைவு கூரப்படுகிறது.
ஜூலையில் இந்த புனித நிகழ்வை பின்வரும் நிகழ்ச்சிகளுடன் கொண்டாடும் வேளையில், எங்களோடு இணைந்திட உங்களை அழைக்கிறோம்:
சிறப்பு சொற்பொழிவுகள்
மரணமற்ற கிரியா யோகா குரு: மகாவதார பாபாஜி
பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய உலகப் புகழ்பெற்ற ஆன்மீக இலக்கியமான ஒரு யோகியின் சுயசரிதம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மறைஞானி யோகி, மகாவதார பாபாஜி யார்? பத்ரிநாராயணனுக்கு அருகிலுள்ள வட இமயமலைச் சிகரங்களில் வாழும் மரணமற்ற ஞானியாக அறிமுகப்படுத்தப்படும் பாபாஜி, மறுபிறவிச் சுழற்சியிலிருந்து முழுமையாக விடுபட்டவரும், மனிதகுலத்தின் ஆன்மீக மேம்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒளிவீசும் இளமையான ஸ்தூல வடிவத்தைத் தக்கவைத்திருப்பவருமான ஒரு ‘மகாவதாரம்’ (உன்னத அவதாரம்) தெய்வீக அவதாரம் என்று விவரிக்கப்படுகிறார். பாபாஜியைச் சந்தித்தவர்கள் அவருடைய இயல்பு தூய அன்பு என்றும், பணிவு அவரது தனிச்சிறப்பு என்றும் கூறுகின்றனர். அவருடைய புனிதப் பெயரை பயபக்தியுடன் உச்சரிப்பது உடனடி ஆசியை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) சன்னியாசிகள் ஆங்கிலம், இந்தி, பெங்காலி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வழங்கும் சொற்பொழிவுகள் மூலம் மகாவதார பாபாஜியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்.
இந்த அருளுரைகள் மூலம், ஆன்ம-அனுபூதிக்கான புனித, விஞ்ஞானபூர்வ கிரியா யோக உத்தியானது — பாபாஜியிடமிருந்து லாஹிரி மகாசயர், ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மற்றும் இறுதியாக பரமஹம்ஸ யோகானந்தர் வழியாக எவ்வாறு ஒரு தடையற்ற குரு-சிஷ்ய பரம்பரையின் ஊடாக பரவியது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 1920-ஆம் ஆண்டில், இப்போதனைகளை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு செல்லும் பணியை பாபாஜி அவரிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சொற்பொழிவுகள் பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.
மரணமற்ற கிரியா யோகா குரு: மகாவதார பாபாஜி
1:07:34
1:14:14
58:58
1:07:20
வரவிருக்கும் சொற்பொழிவு மொழி(கள்)
- பெங்காலி மற்றும் கன்னடம்: ஜூலை 24, வெள்ளிக்கிழமை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு நினைவு நிகழ்ச்சி
ஆன்லைன் நினைவு தியானம்
சனிக்கிழமை, ஜூலை 25, 2026
காலை 6:30 – காலை 8:00 மணி (IST)
ஜூலை 25 அன்று, மகாவதார பாபாஜியை போற்றும் விதமாக ஒரு சிறப்பு ஆன்லைன் தியான நிகழ்ச்சி YSS சன்னியாசி ஒருவரால் நடத்தப்படும். இதில் கீர்த்தனம், தியானம் மற்றும் ஊக்கமளிக்கும் வாசிப்பு ஆகியவை நடைபெறும்.
கவனிக்கவும்: இந்த நிகழ்ச்சியை ஜூலை 26, ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி (IST) வரை பார்க்கலாம்.
நேரில் நிகழ்ச்சிகள்
மகாவதார பாபாஜியைச் போற்றும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் YSS ஆசிரமங்கள், கேந்திராக்கள் மற்றும் மண்டலிகளில் நேரில் நடத்தப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் அறியவும், இந்நிகழ்ச்சிகள் ஒன்றில் பங்கேற்கவும், உங்கள் அருகிலுள்ள தியான மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தத் புனித தருணத்தில், YSS/SRF குரு பரம்பரையினரால் நமக்கு வழங்கப்பட்ட கிரியா யோகப் பாதையின் அருளாசிகளுக்காக, பக்தர்கள் காணிக்கை செலுத்தித் தங்கள் நன்றியை வெளிப்படுத்துகிறார்கள். ஆன்ம விடுதலை அளிக்கும் இந்த போதனைகளை உண்மையான சாதகர்களிடம் கொண்டு சேர்க்கும் YSS-இன் பணியில் நீங்கள் பங்கேற்க விரும்பினால், கீழே பகிரப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக அவ்வாறு செய்யுமாறு உங்களை அழைக்கிறோம்.

















