ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் அவதார தின
நினைவு நிகழ்ச்சிகள்

YSS ODK ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் அவதார தின நினைவுகூரும் நிகழ்ச்சிகள் — மே 2026

நிகழ்வு பற்றி

எனது குருதேவர்‌ ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வருக்கு அனைத்திற்காகவும்‌ கடமைப்பட்டுள்ளேன்‌; அவர்‌ எல்லா வழிகளிலும்‌ தலை சிறந்தவராக விளங்கினார்‌. அவருடைய விவேகத்தைப்‌ பின்பற்றியதன்‌ மூலம்‌ எனது பணியைச்‌ செய்வதில்‌ வெற்றி காண முடிந்தது….

— பரமஹம்ஸ யோகானந்தர்

மே 10 அன்று, பரமஹம்ஸ யோகானந்தரின் குருவும், YSS/SRF பக்தர்களின் பரமகுருவும், ஞானாவதார் அல்லது “ஞானத்தின் அவதாரம்” எனப் போற்றப்படும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் அவதார தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

மே மாதத்தில், இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்தப் புனித நிகழ்வை நினைவு கூரும் வேளையில், எங்களுடன் இணைந்துகொள்ள உங்களை வரவேற்கிறோம்.

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி அவர்களை
போற்றும் வகையில் 3 மணிநேர தியானம்

ஞாயிற்றுக்கிழமை, மே 3, 2026
காலை 6:10 – காலை 9:30 (IST))

மே 3 அன்று, YSS சன்னியாசி ஒருவரால் வழிநடத்தப்படும் 3-மணி நேர ஆன்லைன் தியானத்துடன் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்ஜியை போற்றுவோம். இந்த நிகழ்ச்சியில், கீர்த்தனம், தியானம், மற்றும் அகத் தூண்டுதல் தரும் வாசிப்புகள் இடம்பெறும்.

கவனத்திற்கு: இந்த நிகழ்ச்சி மே 05, செவ்வாய்கிழமை இரவு 10 மணி (IST) வரை பார்க்கக் கிடைக்கும்.

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் அவதார தின
நினைவு தியானம்

ஞாயிற்றுக்கிழமை, மே 10, 2026
காலை 6:30 – காலை 8:00 மணி (IST)

மே 10 ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் அவதார தினத்தில், அந்த மகா ஞானாவதாரரை, YSS சன்னியாசி ஒருவரால் வழிநடத்தப்படும் ஆன்லைன் நினைவுச் சிறப்புத் தியானத்துடன் நாம் போற்றுவோம்.

கவனத்திற்கு: இந்த நிகழ்ச்சி மே 11, திங்கட்கிழமை இரவு 10 மணி (IST) வரை பார்க்கக் கிடைக்கும்.

இந்த நினைவு கூரும் தியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்.

இந்தச் சிறப்பு நிகழ்வு, YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள், மற்றும் மண்டலிகளில் நேரில் நடைபெறும் தியான நிகழ்ச்சிகளுடன் நினைவு கூரப்படும். இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், பங்கேற்கவும், உங்களுக்கு அருகிலுள்ள தியான மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இப்புனித தருணத்தில், YSS/SRF குரு பரம்பரையின் மூலம் நமக்கு அருளப்பட்ட கிரியா யோகப் பாதை அருளாசிகளுக்கு, பக்தர்கள் காணிக்கை செலுத்துவதன் வாயிலாகத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.

நீங்கள் YSS-இன் ஆன்ம-அனுபூதி அளிக்கும் இந்தப் போதனைகளை உண்மையாக நாடுவோருக்கு கொண்டு செல்லும் பணிக்கு பங்களிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அவ்வாறு செய்ய உங்களை அழைக்கிறோம்.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர