அன்பர்களே,
இந்தியாவையும் பரந்த பகுதியையும் பாதிக்கும் அதிகரித்து வரும் சர்வதேச பதட்டங்கள் பற்றிய செய்திகள் எனது இதயத்தில் ஆழ்ந்த, பிரார்த்தனைக்குரிய கவலையைத் தூண்டுகின்றன, அது உங்கள் இதயத்திலும் இருப்பதை நான் அறிவேன். இது போன்ற அமைதியற்ற காலங்களில், தியானம் செய்யும் பக்தர்கள் உலகிற்கு ஒரு முக்கிய சேவையை வழங்க முடியும், மேலும் ஒரு முக்கியமான, கண்ணுக்குத் தெரியாத பங்கை வகிக்க முடியும் என்பதால் நாம் நம்பிக்கையில் உறுதியாக இருப்போம் — அமைதியாகவும், நம்மில் உள்ளார்ந்திருக்கும் இறைவனின் தெய்வீக அமைதியின் உறுதியான சக்தியை மையமாகக் கொண்டு அதில் வேரூன்றியும் — என்று வலியுறுத்துகிறேன்.
தியானத்தின் போதும் மற்றும் அடிக்கடி நாள் முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்ய என்னுடனும் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள சன்னியாசிகளுடனும் இணைய YSS/SRF இன் பக்தர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறேன். குருதேவரின் ஆன்மீக குடும்பம் மற்றும் அவரது உலகளாவிய பிரார்த்தனைக் குழுவின் உறுப்பினர்களாக, ஒவ்வொரு நாளும் தியானத்திற்குப் பிறகு அவரது யோக முறையில் குணப்படுத்தும் உத்தியை நாம் தொடர்ந்து செய்வோம் — நல்லிணக்கம், நல்லெண்ணம் மற்றும் வேறுபாடுகளின் பரஸ்பர தீர்வின் பக்கம் போக்கைத் திருப்பும், இறைவனின் எல்லையற்ற அருளாசிகள், பிரதேசம் முழுவதையும் சூழ்ந்து, புனித ஓம் அதிர்வுடன் தெய்வீக அன்பின் மகத்தான சக்தியை வெளிப்படுத்துவதை மனக்காட்சியாகக் காண்போம்.
அனைவரின் இதயங்களையும் ஒளிரச் செய்து, புரிதலையும், நீடித்த அமைதியையும் நோக்கி அவர்களை வழிநடத்த இறைவனின் அருளாசிகளையும், ஒளியையும் நாம் அனைவரும் ஒன்றாகக் கோருவோம். ஒருமுகப்படுத்தப்பட்ட பிரார்த்தனை அதிர்வுகளின் ஒவ்வொரு ஒளிபரப்பின் மூலமும், தெய்வீகத்தின் ஞான-வழிகாட்டுதல் மற்றும் உயிரோட்டமான இருப்பால் உயர்த்தப்பட்ட இறைவனின் அனைத்து குழந்தைகளுக்கும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உதவுகிறோம்.
நான் உங்கள் அனைவரையும் என் அன்பிலும் பிரார்த்தனைகளிலும் வைத்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம் அன்பிற்குரிய குருதேவர் மற்றும் பரமகுருமார்களின் பாதுகாக்கும் இருப்பு, உங்களையும் உங்கள் அன்பிற்குரியவர்களையும், எப்போதும் அவர்களின் எல்லையற்ற அன்பான பராமரிப்பில் உள்ளீர்கள் என்ற ஆறுதல் தரும் உறுதிப்பாட்டுடன் எப்போதும் சூழட்டுமாக.
இறைவன் மற்றும் குருவின் இடைவிடாத அருளாசிகள்,
ஸ்வாமி சிதானந்த கிரி
பரமஹம்ஸ யோகானந்தரால் கற்பிக்கப்பட்ட குணப்படுத்தும் உத்தி நடைமுறையில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரியுடன் இணைய உங்களை வரவேற்கிறோம். கலந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்: