அன்பர்களே,
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) இயக்குநர்கள் குழுவில் இரண்டு முக்கியமான மாற்றங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
2002 முதல் YSS இயக்குநர்கள் குழு உறுப்பினராகவும், 2007 முதல் பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய ஸ்வாமி ஸ்மரணானந்தா, இப்போது நீண்ட காலமாக காலியாக உள்ள துணைத் தலைவர் பதவியை நிரப்புவார். குருதேவருக்கு பிரியமான YSSக்கு பொதுச் செயலாளராக ஸ்வாமி ஸ்மரணானந்தாஜி ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையை நான் மிகவும் பாராட்டுகிறேன். அவரது வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் YSS குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது மற்றும் குருதேவரின் புனித கிரியா யோக போதனைகள் பரவலாகப் பரப்பப்பட்டுள்ளது. இயக்குநர்கள் குழு, சன்னியாசிகள் மற்றும் அர்ப்பணிப்புள்ள சாதாரண சீடர்களின் ஆதரவுடன், அவர் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில் YSS பல முக்கியமான இலக்குகளை அடைந்துள்ளது.
2011 முதல் YSS இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக பணியாற்றிய ஸ்வாமி ஈஸ்வரானந்தா, ஸ்வாமி ஸ்மரணானந்தாவுக்கு பதிலாக யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார். ஸ்வாமி ஈஸ்வரானந்தாஜி பல ஆண்டுகளாக குருதேவரின் பணிகளில் பல நிலைகளில் திறம்பட பணியாற்றியுள்ளார். லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் / யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சர்வதேச தலைமையகத்தில், நம் முன்னாள் அன்பிற்குரிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் கீழ் பணியாற்றியும் மற்றும் பல்வேறு நிர்வாக பொறுப்புகளில் அவருக்கு உதவியாயிருந்தும், ஐந்து ஆண்டுகள் சிறப்பான பயிற்சியைப் பெற்றார்.
ஸ்வாமி ஸ்மரணானந்தா மற்றும் ஸ்வாமி ஈஸ்வரானந்தா ஆகியோர் தங்கள் புதிய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இறைவன் மற்றும் குருமார்களின் அருளாசிகளை நாம் வேண்டுகிறோம். மேலும் உண்மை-நாடும் ஆன்மாக்களுக்கு கிரியா யோக ஆன்ம அனுபூதி போதனைகளைப் பரப்பும் குருதேவரின் பணியின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் பரவலையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
குருதேவரின் அன்பிலும் சேவையிலும்.
ஸ்வாமி சிதானந்த கிரி
தலைவர், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்