ஒரு யோகியின் சுயசரிதம் பிரசுரமான 75வது ஆண்டு விழா

29 அக்டோபர், 2021

இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்​

AY-ஆங்கிலம்-புதிய-பெரிய-சின்னம்-75y (1)

நான் ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ புத்தகங்களை வீட்டில் அடுக்கி வைத்திருக்கிறேன், அதை மக்களுக்குத் தொடர்ந்து கொடுக்கிறேன். மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்பும் பொழுது, இதைப் படியுங்கள் என்று சொல்கிறேன், ஏனென்றால் இது ஒவ்வொரு மதத்தின் அடிப்படையான உண்மைகளை நமக்கு எடுத்துரைக்கிறது.

— ஜார்ஜ் ஹாரிசன் (பீட்டில்ஸின் மறைந்த முன்னாள் அங்கத்தினர்)

ஒரு யோகியின் சுயசரிதம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது?

உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

ஒரு நாள், பரமஹம்ஸ யோகானந்தர் தனது சுயசரிதையை எழுதும் போது, தன்னுடன் இருந்தவர்களிடம், “நான் இவ்வுலகை விட்டுச் சென்ற பின், இந்தப் புத்தகம் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மாற்றும்” என்று அமைதியாகக் கூறினார். சிறந்த ஆன்மீக இலக்கியம் எனப் பரவலாகப் போற்றப்பட்ட, எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியானஒரு யோகியின் சுயசரிதத்தின் தாக்கம் தொடர்ந்து பரவி, உலகெங்கிலும் உள்ள வாசகர்களின் வாழ்க்கையை எழுச்சியூட்டி, மாற்றியமைக்கிறது.

யோகானந்தரின் சுயசரிதம் வாசகரை பன்முகப் பயணத்தில் அழைத்துச் செல்கிறது. ஆசிரியரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஆன்மீகத் தேடல் பற்றிய மனதைத் தொடுகின்ற ஆழமான உள் நோக்கிலிருந்து, பல சன்னியாசிகள் மற்றும் யோகிகளின் (நன்கு அறியப்பட்ட மற்றும் அறியப்படாத) கவரக்கூடிய உருவப்படங்கள் வரை, இந்தியாவின் ஆழ்ந்த ஆன்மீக அம்சங்களின் ஆழமான விளக்கங்கள் வரைஒரு யோகியின் சுயசரிதம் தங்களுக்குள் தெய்வீகத்தை அனுபவிக்கும் ஆழ்ந்த ஆசையை பலரிடம் தூண்டியது.

தொடர்ந்து ஊக்கத்தை அளிக்கும் புத்தகம்

 ஒரு யோகியின் சுயசரிதம்  முதன்முதலாக 1946ம் ஆண்டின் குளிர்காலத்தில் வெளியிடப்பட்ட போது, அது வாசகர்கள் மற்றும் உலக ஊடகங்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

கொலம்பியா யுனிவர்சிட்டி இதழ்  எழுதியது, “யோகத்தைப் பற்றி ஆங்கிலத்திலோ அல்லது வேறு எந்த மொழியிலோ இதற்கு முன்பு இவ்வாறு எழுதப்படவில்லை” நியூஸ் வீக் செய்தி வெளியிட்டுள்ளது, “யோகானந்தரின் புத்தகம் உடலைப் பற்றியது என்பதை விட ஆன்மாவின் சுயசரிதையாகும்…. ஒரு சுவாரஸ்யமான மற்றும் தெளிவாக விளக்கப்பட்ட ஆய்வு.”மற்றும் நியூயார்க் டைம்ஸ் ” வாழ்க்கை பற்றிய ஒரு அரிய தொகுப்பு.”

அப்போதிலிருந்து, இந்த புத்தகம் பலரையும் ஈர்த்து மற்றும் தொடர்ந்து பிரபலமடைந்தும் வருகிறது. 1999-ல், இது “நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக புத்தகங்களில் ஒன்றாக” அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் நிதித்துறை செய்தி ஊடகமான 24/7 வால் ஸ்டீர்ட். ஒரு சிறப்பு அறிக்கையில் ஒரு யோகியின் சுயசரிதத்தை  “எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான 20 சுயசரிதைகளில்” ஒன்றாக குறிப்பிட்டுள்ளது . ஹெலன் கெல்லரின் ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்’  மற்றும் நெல்சன் மண்டேலாவின் ‘லாங் வாக் டு ஃப்ரீடம்’‘ஒரு யோகியின் சுயசரிதம்’ மற்றும் இப்பட்டியலில் உள்ள பிற தலைப்பிலுள்ள படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட 900 படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.

“மனித ஆன்மாவின் ஆற்றலை மகிழ்ச்சியுடன் உறுதிப்படுத்துவது” (வெஸ்ட் கோஸ்ட்டின் புத்தக ஆய்வு))என்று மதிக்கப்படும் — ஒரு யோகியின் சுயசரிதம்  தியானத்தில் பெருகிவரும் ஈர்ப்பினாலும் மற்றும் வெளிப்புறமாக- அடிக்கடி கொந்தளிப்பான – மாற்றம் நிகழ்ந்த போதிலும் ஆன்மீக சமநிலை மற்றும் அக அமைதியைக் கண்டறிவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு தொடர்ந்து பயனளிக்கக்கூடிய மற்றும் வாழ்க்கையை மாற்றக்கூடிய பரமஹம்ஸரின் போதனைகளாலும், சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

பல ஆண்டுகளாக, நோபல் பரிசு பெற்ற தாமஸ் மான், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் (அவரது நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகத்தை வழங்க ஏற்பாடு செய்தவர்), புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஜான் கோல்ட்ரேன் மற்றும் ரவிசங்கர், பீட்டில் ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி போன்ற பல்வேறு தரப்பு வாசகர்களை இப்புத்தகம் ஈர்த்துள்ளது.

ஒரு யோகியின் சுயசரிதம் உங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பகிர்வது.

ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் சுயசரிதம் பல வழிகளில் என்னை ஆசீர்வதித்துள்ளது. அவரது வாழ்க்கை சரிதம் என்னை அடிக்கடி தியானிக்கவும், சமநிலையான ஆன்மீக மற்றும் உலக வாழ்வில் கவனம் செலுத்தவும் என்னைத் தூண்டியது. மேலும், இறைவனைப் பற்றிய ஆழ்ந்த புரிதலை நான் பெற்றேன்….

– C.M., புனே

பரமஹம்ஸ யோகானந்தரின்  ஒரு யோகியின் சுயசரிதத்தின்,75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உங்கள் சொந்த வாழ்க்கையில் இப்புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிய உங்கள் தனிப்பட்ட நினைவுகளைப் பகிர்வதன் மூலம் என்றும் நிலைத்திருக்கும் இப்புத்தகத்தின் ஈர்ப்பைக் கொண்டாட உங்களை அழைக்கிறோம்.

உங்கள் அனுபவங்களை எங்கள் வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் பகிர்ந்து கொள்ள நாங்கள் எதிர்நோக்குகிறோம், மேலும் ஒரு யோகியின் சுயசரிதம் லட்சக்கணக் கானவர்களை மாற்றியது போல உங்கள் வாழ்க்கையையும் எவ்வாறு மாற்றியது என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்! இந்தப் புத்தகம் தொடர்பான உங்கள் அனுபவங்களை உங்கள் சொந்த சமூக ஊடகப் பக்கங்களில் நேரடியாகப் பகிர விரும்பினால், Facebook, Instagram மற்றும் Twitter இல் @yoganandayss இல் எங்களை அணுகவும்.

எங்கள் வலைத்தளத்தில் யோகியின் சுயசரிதம் பக்கத்தைப் பார்வையிடவும் உங்களை ஊக்குவிக்கிறோம்.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp