YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்தஜி இந்தியா வருகை — 2023

7 ஏப்ரல், 2023

YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி இந்தியாவில் தனது ஒரு மாத கால விஜயத்தைத் தொடங்க ஜனவரி 22 அன்று நொய்டா ஆசிரமத்தை அடைந்தார் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அவருடன் SRF அமைப்பைச் சேர்ந்த ஸ்வாமி கமலானந்தாவும் வந்திருந்தார்

ஸ்வாமி சிதானந்தர் தனது பயணத்தின் போது, ஹைதராபாத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சொற்பொழிவுகள் மற்றும் தியானங்களின் ஐந்து நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். YSS சங்கம் 2023 பிப்ரவரி 12 – 16 வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது, மேலும் நிகழ்வுகள் இப்பொழுதும் பார்வைக்குக் கிடைக்கின்றன.

ஸ்வாமிஜி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்த புகைப்படங்களை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

செராம்பூர் யாத்ரீகத் தலங்கள்

ஹைதராபாத்தில் ஸ்வாமி சிதானந்தர், பரமஹம்ஸ யோகானந்தரின் குருவான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வருடன் தொடர்புடைய செராம்பூரில் இரண்டு யாத்ரீகத் தலங்களை உருவாக்கும் திட்டங்களை மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

இவற்றில் முதலாவது கங்கை நதிக்கரையில் உள்ள ஆலமரம் தொடர்பானது, செராம்பூரில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் ஆசிரமத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ளது, இம்மரத்தடியில் 1894 ஆம் ஆண்டில் மகாவதார் பாபாஜி வருகை தந்தார் (ஒரு யோகியின் சுயசரிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது விவரிக்கப்பட்டுள்ளது).

இந்த புனிதமான ஆலமரத்திலிருந்து ஆற்றுக்குச் செல்லும் பகுதியை நிர்வகிக்கவும் பராமரிக்கவும் YSS செராம்பூர் நகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆலமரத்தை ஒட்டிய இரண்டு பெரிய கட்டிடங்களையும் YSS வாங்கியுள்ளது. காலப்போக்கில், தெய்வீக பாபாஜி விட்டுச்சென்ற அதிர்வுகளை பக்தர்கள் உணரப் பொருத்தமான தியான சூழலை ஏற்படுத்துவதற்காக YSS இந்த தளத்திற்கான திட்டங்களை உருவாக்கும்.

இரண்டாவது தளம் செராம்பூரில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்ஜியின் முக்கிய ஆசிரமத்துடன் தொடர்புடையது, அங்கு பரமஹம்சாஜி தனது வாழ்க்கையை மாற்றும் ஆன்மீகப் பயிற்சியைப் பெற்றார், இதனை ஒரு யோகியின் சுயசரிதத்தில்“என் குருவின் ஆசிரமத்தில் கழித்த வருடங்கள்” என்ற அத்தியாயத்தில் அவர் கூறுகிறார்.

பல ஆண்டுகளாக யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா தமது ஆசிரம சொத்தின் ஒரு பகுதியில் ஒரு நினைவுக் கோவிலை (மேலே காட்டப்பட்டுள்ளது) பராமரித்து வருகிறது. இந்த ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஸ்மிருதி மந்திர் என்னும் இக்கோயில் 1977 ஆம் ஆண்டில் YSS வைர விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஸ்ரீ மிருணாளினி மாதாவால் அர்ப்பணிக்கப்பட்டது.

YSS ஆசிரம சொத்தின் முழு உரிமையையும் பெற்றுள்ளது. அசல் ஆசிரமக் கட்டிடத்தை முடிந்தவரை புனரமைத்து, இந்த மகான்களின் அதிர்வுகள் நிறைந்த ஒரு யாத்திரைத் தலத்தை ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்குக் கிடைக்கச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

செராம்பூரில் உள்ள இந்த இரண்டு புனித யாத்திரைத் தலங்களுக்கான விரிவான திட்டங்களை சரியான நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

YSS நொய்டா ஆசிரமத்தில் சத்சங்கம்

பிப்ரவரி 26 அன்று YSS நொய்டா ஆசிரமத்தில் YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி “த ட்ரேன்ஸ்ஃபர்மேடிவ் பவர் ஆஃப் கிரியா யோகா” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சுமார் 1,400 பக்தர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

வழக்கமான, அர்ப்பணிப்புடன் கூடிய, விடாமுயற்சி மற்றும், பக்தியுடன் செய்யப்படும் முழுமையான கிரியா யோக விஞ்ஞானத்தின் பயிற்சி ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தைப் பற்றி ஸ்வாமிஜி உரையாற்றினார்.

ஸ்வாமிஜி தனது இந்திய சுற்றுப்பயணத்தின் கடைசிக் கட்டமாக நொய்டாவில் இருக்கிறார்.

நொய்டாவில் ஸ்வாமி சிதானந்தஜியின் சத்சங்கத்தின் காட்சிகள் இங்கே:

தக்ஷினேஸ்வரில் உள்ள யோகதா சத்சங்க மடத்திற்கு வருகை

ஹைதராபாத்தில் நடந்த சங்கத்தில் கலந்து கொண்ட பின்னர் ஸ்வாமி சிதானந்தா அவர்கள் தக்ஷீனேஸ்வரில் உள்ள யோகதா சத்சங்க மடத்திற்கு சென்றார். பிப்ரவரி 19, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் ஒரு சிறப்பு சத்சங்கம் நடத்தினார். இந்நிகழ்வின் சில புகைப்படங்களை கீழே பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

YSS சங்கம் 2023 இல் பங்கேற்பதற்காக ஹைதராபாத் வருகை

ராஞ்சி யோகதா சத்சங்க மடத்திற்கு விஜயம் செய்த பின்னர், கன்ஹா சாந்தி வானத்தில் நடைபெற்ற YSS சங்கம் 2023 இல் பங்கேற்பதற்காக ஸ்வாமி சிதானந்த கிரி அவர்கள் பிப்ரவரி 10, 2023 அன்று ஹைதராபாத் வந்தார். வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு கடந்து செல்வது என்பது குறித்த குருதேவரின் போதனைகளிலிருந்து ஞான முத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார். மேலும், பங்கேற்பாளர்களை 3 மணி நேர சிறப்பு கூட்டு தியானத்திற்கு வழிநடத்தினார். பிப்ரவரி 16-ம் தேதி ஸ்வாமிஜி நிறைவு சத்சங்கம் நடத்தினார், அதில் சங்க அனுபவத்தை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது குறித்து பக்தர்களுக்கு ஊக்கமளித்தார்.

அந்த நிகழ்வின் சில புகைப்படங்களை கீழே கண்டு மகிழுங்கள்.

சங்கம் சமயத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் காண கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்க.

YSS ராஞ்சி ஆசிரமத்தில் ஸ்வாமி சிதானந்தஜியின் சத்சங்கம்

YSS/SRF இன் முன்னோடி மற்றும் ஆன்மீகத் தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரி பிப்ரவரி 5 ஆம் தேதி YSS ராஞ்சி ஆசிரமத்தில் ஒரு சத்சங்கத்தை நடத்தினார், இதில் சுமார் 800 YSS/SRF பக்தர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஸ்வாமிஜியும் ஒரு வழிகாட்டப்பட்ட தியானத்தில் கூட்டத்தை வழிநடத்தினார், மேலும் அவர் பங்கேற்பாளர்களை தனிப்பட்ட முறையில் வாழ்த்தி, அவர்கள் புறப்படும்போது அவர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

யோகதா சத்சங்க கல்வி வளாகத்தில் புதிய வசதிகள் அர்ப்பணிப்பு — ஜகன்னாத்பூர் (ராஞ்சி)

YSS/SRF இன் மரியாதைக்குரிய தலைவரும் ஆன்மீகத் தலைவருமான ஸ்வாமி சிதானந்தஜி ஜனவரி 29 அன்று ராஞ்சியின் ஜெகன்நாத்பூரில் உள்ள யோகதா சத்சங்க கல்வி வளாகத்திற்குப் புதிய வசதிகளை அர்ப்பணித்தார், ராஞ்சி கல்வி சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், YSS சன்னியாசிகள் மற்றும் பக்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் YSS கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் கலந்து கொண்ட அந்த மறக்க முடியாத விழாவில், 1,100 பேர் கலந்து கொண்டனர். நுாற்றாண்டு கால வரலாற்றை விளக்கும் குறும்பட நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த அதிநவீன வசதிகள் பரமஹம்ஸ யோகானந்தஜி தனது பள்ளியில் பின்பற்றிய பண்டைய குருகுல கொள்கைகளின்படி வடிவமைக்கப்பட்டன, அதாவது இயற்கைக்கு நெருக்கமாக படிப்பது. அவற்றில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், ஒரு கலையரங்கம் மற்றும் ஒரு நிர்வாக கட்டிடம் ஆகியவை அடங்கும். இந்த நவீன பள்ளி வளாகத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்படுத்துவார்கள்.

தொடக்க விழாவின் சில புகைப்படங்களை கீழே காணவும்.

ராஞ்சி விஜயம்

ஸ்வாமி சிதானந்தஜி ஜனவரி 24, 2023 அன்று மாலை ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க கிளை மடத்திற்கு வருகை புரிந்துள்ளார். ஸ்வாமிஜி ராஞ்சியில் தங்கியிருக்கும் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவர் இங்கு வந்த சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

இந்தியா வருகை

டெல்லி விமான நிலையத்தில் ஸ்வாமிஜியின் வருகை மற்றும் YSS நொய்டா ஆசிரமத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு ஆகியவற்றின் சில புகைப்படங்களைப் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இதைப் பகிர