பரமஹம்ஸ யோகானந்தரின் மகாசமாதி தினம் — பரம்பொருளுடன் ஐக்கியமான நிலையில், ஒரு மாபெரும் யோகி தனது ஸ்தூல உடலிலிருந்து இறுதியாக உணர்வுபூர்வமாக வெளியேறும் நிகழ்வு —மார்ச் 7 அன்று வருகிறது. அவரது குருவான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் மகாசமாதி தினம் மார்ச் 9 அன்று வருகிறது. பரமஹம்ஸ யோகானந்தரையும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரையும் போற்றும் விதமாக யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசிகள் பின்வரும் சிறப்பு ஆன்லைன் நிகழ்வுகளை நடத்துவார்கள்:
- சனிக்கிழமை, மார்ச் 7: பரமஹம்ஸ யோகானந்தர் மகாசமாதி தின நினைவு தியானம்
- ஞாயிறு, மார்ச் 8: பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் நினைவு ஆறு மணி நேர தியானம்
- திங்கள், மார்ச் 9: ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மகாசமாதி தின நினைவு தியானம்
பரமஹம்ஸ யோகானந்தர்
மகாசமாதி தின நினைவு தியானம்
சனிக்கிழமை, மார்ச் 7, 2026
காலை 6:30 மணி – காலை 8:00 மணி (IST)
மார்ச் 7, 1952 அன்று, பரமஹம்ஸ யோகானந்தர் மகாசமாதி அடைந்தார். இந்த நாள் இந்தியா முழுவதும் சிறப்பு தியான நிகழ்ச்சிகளுடன் நினைவுகூரப்படுகிறது. YSS சன்னியாசி ஒருவர் வழி நடத்தும் சிறப்பு ஆன்லைன் தியானத்தில் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம். இந்த நிகழ்ச்சியில் கீர்த்தனம், உத்வேகம் தரும் வாசிப்புகள் மற்றும் தியானம் ஆகியவை இடம்பெறும்.
கவனிக்கவும்: இந்த நிகழ்ச்சியை மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி (IST) வரை பார்க்க முடியும்.
பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்
ஆறு மணி நேர நினைவு தியானம்
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 8, 2026
காலை 9:40 – மாலை 4:00 வரை (IST)
நம் அன்பிற்குரிய குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் YSS/SRF பக்தர்களின் பரமகுரு ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆகியோரின் மகாசமாதி சிறப்பு தினங்களை நினைவுகூரும் வகையில், மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை அன்று YSS சன்னியாசிகளால் நடத்தப்படும் ஆறு மணி நேர ஆன்லைன் தியானத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறோம்.
இந்த நிகழ்ச்சி சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து பிரார்த்தனை, அகத் தூண்டுதல் தரும் வாசிப்பு, மற்றும் சங்கீர்த்தனம், தியானம் ஆகியவை இடம்பெறும். பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தி மற்றும் நிறைவுப் பிரார்த்தனையுடன் நிறைவுறும்.
விரிவான நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:
- சக்தியூட்டும் உடற்பயிற்சி – காலை 9:40 முதல் காலை 10:00 வரை (IST)
- முதல் பகுதி – காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை (IST)
- இடைவேளை – மதியம் 1:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை (IST)
- இரண்டாவது பகுதி – மதியம் 1:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை (IST)
கவனிக்கவும்: நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்ள முடியாதவர்கள், இந்த நிகழ்வை மார்ச் 10, செவ்வாய்க்கிழமை இரவு 10 (IST) மணி வரை பார்க்க முடியும்.
ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்
மகாசமாதி நினைவு தியானம்
திங்கள், மார்ச் 9, 2026
காலை 6:30 – காலை 8:00 மணி (IST)
ஞானாவதார் அல்லது ‘ஞானத்தின் அவதாரம்’ என்று போற்றப்படும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி அவர்கள், பரமஹம்ஸ யோகானந்தரின் குருவும், லாஹிரி மகாசயரின் சீடரும் ஆவார். 1936 மார்ச் 9 அன்று, ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மகாசமாதி அடைந்தார் — இந்த நாளை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சிறப்புத் தியானங்களுடன் நினைவுகூர்கிறது.
ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர கிரி அவர்களை போற்றும் விதமாக, மார்ச் 9 திங்கட்கிழமை அன்று, YSS சன்னியாசி ஒருவரால் வழிநடத்தப்படவுள்ள ஒரு சிறப்பு ஆன்லைன் நினைவு தியானத்தில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம். இதில் கீர்த்தனம், ஊக்கமளிக்கும் வாசிப்பு மற்றும் தியானம் நடைபெறும்.
கவனிக்கவும்: இந்த நிகழ்ச்சியை மார்ச் 10, செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி (IST) வரை பார்க்க முடியும்.
இந்த புனித தருணத்தில், மகத்தான குரு மற்றும் பரமகுருவை போற்றும் நினைவுகூரும் நிகழ்ச்சிகள் பல்வேறு ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளில் நேரில் நடத்தப்படுகின்றன. உங்களுக்கு அருகிலுள்ள ஒரு மையத்தைத் தொடர்பு கொள்ள, இங்கே கிளிக் செய்யுங்கள்.
குருவிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஏராளமான ஆன்மீக அருட்கொடைகளுக்காகத் தங்களின் அன்புக்கும், நன்றியுணர்வுக்கும் அடையாளமாக, பக்தர்கள் இந்நாளில் குரு-காணிக்கை சமர்ப்பிக்கின்றனர். இந்த சிறப்பு தருணத்தில் நீங்கள் நன்கொடை வழங்க விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் அவ்வாறு செய்யலாம்.
மேலும் அறிந்துகொள்ள, பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்கலாம்:
- இறுதி ஆண்டுகள் மற்றும் மகா சமாதி
- த ஃபைனல் டேஸ் ஆஃப் பரமஹம்ஸ யோகானந்தா — எ டாக் பை ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா (சங்கமாதா அண்ட் தர்ட் ப்ரெசிடெண்ட் ஆஃப் YSS/SRF)
- பரமஹம்ஸ யோகானந்தா இன் மெமோரியம்: பர்ஸனல் அகௌண்ட் ஆஃப் த மாஸ்டர்’ஸ் ஃபைனல் டேஸ்
- பரமஹம்ஸ யோகானந்தர்
- ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்
- ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் அருளிய கைவல்ய தரிசனம்
- கிரியா யோக தியானப் பாதை
- YSS குரு பரம்பரை

















