YSS

யோகாதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் முக்கிய அறிவிப்புகள்

தயவுசெய்து கீழே உள்ள பக்கத்தில் எங்கள் விரிவான அறிவிப்புகளைப் படிக்கவும். தற்போதைய நிலை மற்றும் சேவைகளின் சுருக்கம் பின்வருமாறு:

புதுப்பிப்பு: மே 16, 2022

ராஞ்சி, தக்ஷிணேஷ்வர், துவாரஹட் மற்றும் நொய்டா ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களில் இப்போது தங்கும் வசதி வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் தங்குவதற்கு முன்பதிவு செய்ய, தயவுசெய்து இந்த ஆசிரமங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.

அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

கிடைக்கக்கூடிய ஆன்லைன் சேவைகள்

பின்வருவனவற்றில் கலந்துகொண்டு பயனடையுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்:

ஆங்கிலத்தில் யோகதா சத்சங்க பாடங்களுக்கு  இதுவரை பதிவு செய்யாதவர்கள் எங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் மூலம் பதிவு செய்யலாம். விண்ணப்பம் செயலாக்கப்பட்டவுடனேயே அவற்றை ஒய் எஸ் எஸ் பாடங்களைப் பயன்பாட்டு டிஜிட்டல் முறையில் பெறத் தொடங்குவீர்கள்.

பாரா-ஆபரணம்

புதுப்பிப்பு: மார்ச் 31, 2022

  • ஒய் எஸ் எஸ் (YSS) ஆசிரமங்கள், கேந்திரங்கள், மண்டலிகள் மற்றும் ஏகாந்த வாசஸ் தலங்களில் குழு தியானங்கள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அனைவரையும் வரவேற்கிறோம்.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பக்தர்கள் YSS ராஞ்சி உதவி மையத்தை  [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி +91 (651) 6655 555மூலமாகவோ (திங்கள்-சனி: காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை) தொடர்பு கொள்ளலாம்.

பாரா-ஆபரணம்

புதுப்பிப்பு: ஜனவரி 15, 2021

ஹரித்வார் கும்ப மேளா – 2021

  • தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக 2021 ஆம் ஆண்டு நடைபெறும் இந்த கும்பமேளாவில் ஒரு முகாமை நடத்த ஒய் எஸ் எஸ் திட்டமிடவில்லை.
பாரா-ஆபரணம்

புதுப்பிப்பு: செப்டம்பர் 5, 2020

  • டிசம்பர் வரை அனைத்து சாதனா சங்கங்கள் மற்றும் சன்னியாசிகளின் சுற்றுப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாரா-ஆபரணம்

புதுப்பிப்பு: ஜூன் 15, 2020

  • செப்டம்பர் இறுதி வரை அனைத்து சாதனா சங்கங்கள் மற்றும் சன்னியாசிகளின் சுற்றுப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாரா-ஆபரணம்

புதுப்பிப்பு: ஏப்ரல் 15, 2020

அரசாங்கம் பணிமுடக்கத்தை நீட்டித்ததன் காரணமாக, முன்னர் அறிவிக்கப்பட்ட அனைத்து ரத்துகளும் இப்போது மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. எனவே, மறு அறிவிப்பு வரும் வரை:

  • ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள், கேந்திரங்கள், மண்டலிகள் மற்றும் அகஓய்வு தியான மையங்களில் அனைத்து குழு நடவடிக்கைகளும் நடைபெறாது.
  • சாதனா சங்கங்கள் (மே), சன்னியாசிகளின் சுற்றுப்பயணங்கள் மற்றும் எகாந்த வாச தியானங்கள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் மே 10 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. மே 10க்குப் பிறகு நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.
  • ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள் மற்றும் எகாந்த வாச தியான மையங்களுக்குச் சென்று தங்குவதற்காக பக்தர்கள் தாங்கள் செய்த பயணத் திட்டங்களை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

srfonlinemeditation.org இல் உள்ள ஆன்லைன் குழு தியானங்களில் பக்தர்கள் தொடர்ந்து பங்கேற்கலாம், அங்கு YSS துறவிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நீண்ட தியானத்தையும் (காலை 6:10 முதல் 9:30 IST வரை) திங்கள் மற்றும் வியாழன்களில் மாலை தியானங்களையும் நடத்துவார்கள். (மாலை 5.10 முதல் 6.30 வரை). மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும் .

ஏப்ரல் 16, 2020 அன்று தியான அமர்வு இந்தியில் நடத்தப்படும். தொடக்க மற்றும் நிறைவு பிரார்த்தனை மற்றும் குணப்படுத்தும் சேவை ஆகியவை இந்தியில் இருக்கும், வாசிப்பு மற்றும் கீதமிசைத்தல் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் இருக்கும்.

பாரா-ஆபரணம்

புதுப்பிப்பு: ஏப்ரல் 6, 2020

மே 10 வரை நிகழ்வுகள் ரத்து: மே 10 வரையிலான அனைத்து ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளின் சுற்றுப்பயணங்கள் மற்றும் எகாந்தவாச தியானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். சிம்லாவில் சாதனா சங்கம், கேரளாவுக்கான சன்னியாசிகளின் சுற்றுப்பயணம் மற்றும் நொய்டா ஆசிரமத்தில் நடைபெற இருந்த ஏகாந்தவாச தியானம் ஆகியவை இதில் அடங்கும்.

பாரா-ஆபரணம்

புதுப்பிப்பு: ஏப்ரல் 2, 2020

YSS பாடங்கள்  டிஜிட்டல் வடிவத்தில் மட்டுமே கிடைக்கும்

ஜார்கண்ட் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிற மாநிலங்களில் பணிமுடக்கம் விளைவாக,  யோகதா சத்சங்க பாடங்கள்  மற்றும் பிற நூல் வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகள் உட்பட எந்த அச்சிடப்பட்ட அஞ்சல்களையும் எங்களால் தற்காலிகமாக அனுப்ப முடியவில்லை. எனினும், இந்த காலகட்டத்தில், நாம் ஆங்கில மொழி பதிப்பை ஆப்பிள் (IOS) மற்றும் ஆன்ட்ராய்டு கருவிகளில் ஒரு  உரிமையுடைய பயன்பாட்டு சாதனம்  டிஜிட்டல் வடிவத்தில் ஒய் எஸ் எஸ் மாணவர்களுக்கு வழங்குவதைத் தொடர்கிறோம்.

இதன் பொருள், எங்களின் வழக்கமான அட்டவணையின்படி நீங்கள் புதிய பாடங்களைப் பெற முடியும், மேலும் உங்கள் டிஜிட்டல் சாதனத்தில் அவற்றைப் படிக்கவும் கற்கவும் முடியும். ஒவ்வொரு பாடத்திலும் இருக்கும் மதிப்புமிக்க துணைப் பாடங்களை நீங்கள் அணுகவும் முடியும்.

நீங்கள் டிஜிட்டல் வடிவில் பெற்றிருக்கும் அனைத்து பாடங்களும், நாங்கள் அஞ்சல்களை மீண்டும் தொடங்கும் போது, அச்சிடப்பட்ட வடிவத்தில் உங்களுக்கு அனுப்பப்படும். சாதாரண சூழ்நிலைகளில், ஆன்மீகப் படிப்பின் உங்களது முதன்மை ஆதாரமாக பாடங்களின் அச்சிடப்பட்ட பதிப்பைப் பயன்படுத்துமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். ஆனால், டிஜிட்டல் சாதனம் தற்காலிக பணிநிறுத்தத்தின் போதும் நீங்கள் பாடங்களைப் பெறுவதை சாத்தியமாக்கியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

இந்த சவாலான நேரத்தில் உங்கள் புரிதலையும் ஒத்துழைப்பையும் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். எங்கள் பிரார்த்தனைகளில் நாங்கள் உங்களைத் இணைத்திருக்கிறோம் என்பதையும், இறைவனும் மகான்களும் தங்களது என்றுமுள்ள தெய்வீக அன்பு மற்றும் பாதுகாப்புடன் உங்களைச் சூழ்ந்துள்ளனர் என்பதையும் தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள்.

YSS பாடங்களுக்கான  விண்ணப்பங்கள் இன்னும் செயலாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

இந்த நேரத்தில் அச்சிடப்பட்ட அஞ்சல்களை எங்களால் அனுப்ப முடியவில்லை என்றாலும்,  YSS பாடங்களுக்கான, புதிய விண்ணப்பங்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம், மேலும் நீங்கள் விண்ணப்பிக்க வரவேற்கிறோம். அச்சிடப்பட்ட பாடங்கள் மீண்டும் அஞ்சல் மூலம் அனுப்பப்பட முடிகின்ற உடனேயே நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த காலகட்டத்தில், ஆங்கில பாடங்களை மாணவர்கள் YSS பாடங்கள் பயன்பாட்டு சாதனத்தில் படிக்க முடியும். பாடங்களை மாணவர்கள் படிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிய பாடங்கள் பயன்பாட்டடு சாதனத்தில் திறக்கப்படும்.

பாரா-ஆபரணம்

புதுப்பிப்பு: மார்ச் 26, 2020

YSS பாடங்கள்  அஞ்சல்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன

ஜார்கண்ட் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிற மாநிலங்களில் பணிமுடக்கம் விளைவாக,  யோகதா சத்சங்க பாடங்கள்  மற்றும் பிற நூல் வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகள் – என எந்த அஞ்சல்களையும் எங்களால் தாற்காலிகமாக அனுப்ப முடியவில்லை. பாடங்களுக்கான உங்கள் தற்போதைய சந்தா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மேலும் எங்கள் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் மீண்டும் தொடங்கும் அஞ்சல்களை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

இந்தச் சூழ்நிலைக்கான குறுகிய காலத் தீர்வுகளை நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம், உங்கள் தேவைகளை எவ்வாறு ஈடு செய்வது என்பது பற்றிய தெளிவான யோசனை எங்களுக்குக் கிடைத்தவுடன் மாற்று வழிகளை அறிவிப்போம். இடைப்பட்ட காலத்தில், நீங்கள் ஏற்கனவே பெற்றுள்ள  பாடங்களை மறுபார்வை செய்யவும் , YSS தியானயுத்திகளைப் பயிற்சி செய்யவும், இறைவனுடனான உங்கள் தனிப்பட்ட உறவை ஆழப்படுத்தவும் இந்த நேரத்தைப் பயன்படுத்துமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.  YSS enews லெட்டருக்கு நீங்கள் ஏற்கனவே சந்தாதாரர் ஆகவில்லை எனில், சந்தாதாரர் ஆகுமாறு, நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.

இந்த சவாலான நேரத்தில் உங்கள் புரிதலையும் ஒத்துழைப்பையும் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். எங்கள் பிரார்த்தனைகளில் நாங்கள் உங்களை இணைத்திருக்கிறோம் என்பதையும், இறைவனும் மகான்களும் தங்களது என்றுமுள்ள தெய்வீக அன்பு மற்றும் பாதுகாப்பால் உங்களைச் சூழ்ந்துள்ளனர் என்பதையும் தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள்.

YSS பாடங்களுக்கான  விண்ணப்பங்கள் இன்னும் செயலாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் அச்சிடப்பட்ட அஞ்சல்களை எங்களால் அனுப்ப முடியவில்லை என்றாலும், YSS பாடங்களுக்கான, புதிய விண்ணப்பங்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம், மேலும் நீங்கள் விண்ணப்பிக்க வரவேற்கிறோம். அச்சிடப்பட்ட பாடங்கள் மீண்டும் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டவுடன் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்.

பாரா-ஆபரணம்

புதுப்பிப்பு: மார்ச் 18, 2020

கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதன் காரணமாக, முன்னர் அறிவிக்கப்பட்ட அனைத்து ரத்துகளும் ஏப்ரல் 20, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. எனவே, ஏப்ரல் 20, 2020 வரை:

  • YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள், மண்டலிகள் மற்றும் அகஓய்வு தியான மையங்களில் அனைத்து குழு நடவடிக்கைகளும் நடைபெறாது.
  • சாதனா சங்கங்கள் (ஏப்ரல்), சன்னியாசச் சுற்றுப்பயணங்கள் மற்றும் எகாந்த வாச தியானங்கள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள் மற்றும் அகஓய்வு தியான மையங்களுக்குச் சென்று தங்குவதற்கு பக்தர்கள் தாங்கள் செய்த பயணத் திட்டங்களை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

srfonlinemeditation.org இல் உள்ள ஆன்லைன் குழு தியானங்களில் பக்தர்கள் தொடர்ந்து பங்கேற்கலாம், அங்கு YSS சன்னியாசிகள் திங்கள் மற்றும் வியாழன்களில் மாலை அமர்வுகளை வழிநடத்துவார்கள் (இந்திய நேரப்படி மாலை 5:10 முதல் மாலை 6:30 வரை). மேலும் அறிய இங்கே இங்கே கிளிக் செய்யவும் .

பாரா-ஆபரணம்

புதுப்பிப்பு: மார்ச் 5, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் பகுதியில் உள்ள பொது சுகாதார நிபுணர்களை நாங்கள் கலந்தாலோசித்துள்ளோம், மேலும் அத்தியாவசியமற்ற அனைத்து கூட்டங்களையும் இடைநிறுத்துமாறு அவர்கள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளனர். அவர்களின் ஆலோசனையை மனதில் கொண்டு, மிகுந்த எச்சரிக்கையுடனும் அக்கறையுடனும், பின்வரும் முடிவுகளை உங்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் மிகவும் வருந்துகிறோம், இது உடனடியாக நடைமுறைக்கு வரும் மற்றும் மறு அறிவிப்பு வரும் வரை செயல்படும்:

தயவு செய்து இந்த முக்கியமான செய்தியை அனைத்து பக்தர்களுடனும் அறிவிப்பு பலகைகள், மின்னஞ்சல், எஸ் எம் எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் விரைவில் பகிருமாறும், அவர்கள் இந்த சவாலான காலகட்டத்தில் அனைத்து மனித குலத்திற்கான பிரார்த்தனைகளில் எங்களுடன் இணையுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
பக்தர்கள் ஏதேனும் கேள்விகள் இருந்தால், அவர்கள் YSS ராஞ்சி உதவி மையத்தை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் : +91 (651) 6655 555 திங்கள்-சனி: காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை)

நமது குருதேவரின் இந்த வார்த்தைகளை மனதில் வைத்துக் கொள்வோம்: “நீங்கள் எது குறித்து அச்சம் கொள்கிறீர்களோ, அதிலிருந்து உங்கள் மனதை விலக்கி இறைவனிடம் விட்டுவிடுங்கள். அவர் மீது நம்பிக்கை வையுங்கள்… ஒவ்வொரு இரவும், நீங்கள் உறங்கும் முன், உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: ‘பரலோகத் தந்தை என்னுடன் இருக்கிறார்; நான் பாதுகாக்கப்பட்டுள்ளேன்.’ விண்ணுலகப் பரம்பொருளுடனும் அவரது பிரபஞ்ச ஆற்றலுடனும் உங்களை மனரீதியாகச் சூழவைத்துக் கொள்ளுங்கள். நோயைத் தடுப்பதற்கு நடைமுறையான வெளிப்புற வழிகளையும் பொது அறிவு முறைகளையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று குருதேவர் எதிர்பார்க்கிறார், அதே சமயம் இறைவனின் அன்பு மற்றும் பாதுகாப்பில் நேர்மறையான அணுகுமுறையையும் நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் நம்மை வலியுறுத்தினார். தியானம் மற்றும் பிரார்த்தனையில் உணரப்படுகிற அந்த அக இணக்கம், நமக்கும் தேவைப்படும் அனைவருக்கும் உதவுவதற்காக இறைவனது குணப்படுத்தும் சக்தியின் எல்லையற்ற நீர்த்தேக்கத்தை அடைய நம்மை அனுமதிக்கும்.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp