
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு, ஒரு யோகியின் சுயசரிதம், லட்சக்கணக்கானவர்களுக்கு இந்தியாவின் பண்டைய யோக தியான போதனைகளுக்கு ஓர் அறிமுகமாகத் தொடர்கிறது. இந்திய சித்தார் கலைஞர் மறைந்த ரவிசங்கர், ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் இவர்களை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த புத்தகம் உலகம் முழுவதும் உள்ள வாசகர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்ட இது, “இருபதாம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களில்” ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு யோகியின் சுயசரிதம் மின்புத்தகத்தின் இலவச பிரதியை நாங்கள் தற்போது வழங்குகிறோம். உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மின்புத்தகத்திற்கான உங்கள் விருப்ப மொழி எது என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள், நாங்கள் உங்களுக்கு இலவச பிரதியை மின்னஞ்சல் செய்கிறோம்.
இலவச மின்புத்தகம் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
(இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கப்பெறும் — ஜூன் 22, 2025 வரை கிடைக்கும்)
உங்கள் விவரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
Pஇலவச மின்புத்தகம் இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையில் மட்டுமே பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நற்சான்றுகள்
நான் இந்த புத்தகத்தை நேசிக்கிறேன். தங்களது எண்ணங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் விடப்படும் சவால்களை எதிர்கொள்ள தைரியமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். இந்த புத்தகத்தில் உள்ள ஞானத்தை புரிந்து நடைமுறைப்படுத்தினால் உங்களுடைய முழு கண்ணோட்டமும் வாழ்க்கையும் மாறிவிடும். தெய்வீகத்தில் நம்பிக்கை வைத்து நற்செயல்களைச் செய்தவாறு முன்னேறிச் செல்லுங்கள். 😇# அன்பு ஒன்றே #நன்றி பாராட்டுங்கள் #ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்
“தற்காலத்திய இந்து மகான்களின் அசாதாரணமான வாழ்க்கைகளையும் சக்திகளையும் நேரில் கண்ட ஒரு சாட்சியாக, இந்த புத்தகம் சரியான காலத்திற்கான மற்றும் காலத்தால் அழியாத முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று… அவருடைய அபூர்வமான வாழ்க்கை வரலாறு நிச்சயமாக மேற்கில் இதுவரை வெளியிடப்பட்ட நூல்களில் இந்திய ஆன்மீக வளத்தை… மிகவும் அதிகமாக வெளிப்படுத்தி காட்டுபவைகளில் ஒன்று.
“மிகவும் வசீகரமான எளிமையாக மற்றும் தன்னை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகளில் ஒன்று… பயில்வதற்கான ஒரு உண்மையான களஞ்சியம். இந்த பக்கங்களில் ஒருவர் சந்திக்கும் புகழ் பெற்ற ஆளுமைகள்…. வளமான ஆன்மீக ஞானத்தால் கொடையளிக்கப்பட்ட நண்பர்களாக நினைவிற்கு வருகின்றனர் மற்றும் இவர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவர் இறை-உன்மத்தம் கொண்ட ஆசிரியர் தானே ஆவார்.”
“(யோகானந்தரின்) புகழ்பெற்ற ஒரு யோகியின் சுயசரிதத்தில் அவர் யோகப் பயிற்சியின் உயர் நிலைகளில் அடையப்பெறும் ‘பிரபஞ்ச உணர்வுநிலை’ விவரங்களையும் யோகம் மற்றும் வேதாந்த கோணத்திலிருந்து மனித இயல்பின் பல சுவாரஸ்யமான கண்ணோட்டங்களையும் வழங்குகிறார்.”